No icon

குடந்தை ஞானி

புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்

எருசலேமில் உள்ள கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பெந்தகோஸ்த் சபைத் தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு, புனித பூமியில் வாழும் கிறிஸ்தவச் சமூகம் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக முறையீடு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"புனித பூமியில் கிறிஸ்தவர்களின் பிரசன்னத்திற்கு எதிராக தற்போதைய அச்சுறுத்தல் என்ற தலைப்பில்" எருசலேமில் உள்ள முதுபெரும்தந்தையர் மற்றும் திருஅவைத் தலைவர்கள் இம்மாதம் 13 ஆம் தேதியன்று ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். அடிக்கடி மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், விளிம்பு தீவிரவாத குழுக்கள் உள்ளூர் சமூகத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன என்பதை அவர்கள் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அருள்பணியாளர்கள் மற்றும் பிற மதத்தலைவர்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் நேரடி மற்றும் வாய்மொழி தாக்குதல்களின் வழியாக எண்ணற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களால், அவை தொடர்ந்து அழிக்கப்பட்டு களங்கப்படுத்தப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மேலும், சுதந்திரமான வழிபாடு மற்றும் தங்கள் அன்றாட அலுவல்களுக்குச் செல்ல விரும்பும் உள்ளூர் கிறிஸ்தவர்கள் அனைவரும் தொடர்ந்து அச்சுறுத்தபட்டு வருகின்றனர் என்றும், அக்கூட்டறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித பூமி, சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளும், எதிர்ப்புகளும் நிகழ்ந்துவரும் நிலையிலும், மதத் தலைவர்கள் அனைவரும், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இந்நாடு பாதுகாப்பைத் தரும் ஒரு இல்லமாக இருக்கும் என்ற இஸ்ரேலிய அரசின் பிரகடனப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டை அங்கீகரித்தனர்.

"இந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாக, புனித பூமியின் புனிதத் தலங்களுக்கு இலட்சக்கணக்கான கிறிஸ்தவ திருப்பயணிகள் வருவதற்கு அரசு வசதி அளித்துள்ளதையும் நாங்கள் காண்கிறோம்," என்றும் தெரிவித்துள்ளனர்.

Comment