திருத்தந்தை பிரான்சிஸ்
பொதுநிலையினருக்குப் புதிய பணிகள் வழங்குகிறார் திருத்தந்தை
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 24 Jan, 2022
ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் இறைவார்த்தையின் ஞாயிறு வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கிறார் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அமைப்பு வழங்கியுள்ள விளக்கத்தின்படி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் வழிபாட்டு முறை முக்கியமான சில வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது என்றும், இந்த கொண்டாட்டத்தின்போது, திருத்தந்தை புதிதாக நிறுவப்பட்ட மறைபோதகப் பணியை, பெண்கள் மற்றும் ஆண்கள் என பல விசுவாசிகளுக்கு வழங்குவார் என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்படவிருக்கும் திருப்பலியில் மறையுரைக்குப் பின்பு, இறைவார்த்தை மற்றும் மறைக்கல்வி ஆசிரியப் பணிக்கான ஆணை வழங்கப்படும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. தென் கொரியா, பாகிஸ்தான், கானா மற்றும் இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுநிலையினரின் பிரதிநிதிகளாக வருபவர்கள் இறைவார்த்தைப் பணிக்கான ஆணையைப் பெறுவார்கள் என்றும், பெரு, பிரேசில், போலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சிலர் மறைக்கல்வி ஆசிரியப் பணிக்கான ஆணையைப் பெறுவார்கள் எனவும் அறிக்கைத் தெரிவிக்கிறது.
கத்தோலிக்கர்கள் அனைவரும் இறைவார்த்தையை அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காக, செப்டம்பர் 30 ஆம் தேதி 2019 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் இக்கொண்டாட்டத்தை நிறுவியதிலிருந்து, இறைவார்த்தை ஞாயிறு ஆண்டுதோறும் பொதுக் காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (இந்த ஆண்டு ஜனவரி 23 அன்று நிகழும்) அனுசரிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
Comment