No icon

குடந்தை ஞானி

எரிமலைப் பாதிப்பிற்கு உதவி கோரும் ஆஸ்திரேலியா காரித்தாஸ்

ஜனவரி 15 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தண்ணீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், ஆஸ்திரேலியாவின் டோங்கா பகுதி முழுவதும் சாம்பலால் மூடப்பட்டுள்ளதுடன், சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பு ஜனவரி 18 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்விளைவாக, அனைத்துத் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், குடிதண்ணீர் பயன்பாட்டை பெரிதும் மாசுபடுத்தியுள்ளது என்றும்  ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.    

டோங்காவில் 104,000க்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில், அவர்களில் 70 விழுக்காட்டினர் முக்கிய தீவான டோங்காடாபுவில் வாழ்கின்றனர் என்றும்எரிமலை வெடிப்பின் கடும் பாதிப்புகளைச்  சமாளிக்க உடனடி உதவிகள் தேவை என்றும் டோங்கன் அரசு கூறியுள்ளதாகவும் ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பு தெரிவிக்கிறது

நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ள டோங்காவில், சுனாமி அலைகளிலிருந்து வெளியேறிய எரிமலை சாம்பல் மற்றும் உப்பு நீர் உட்புகுதல் ஆகியவை, நீர் விநியோகங்களை மாசுபடுத்தியுள்ளது என்றும், இந்நிலை இங்கு வாழும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும், ஆஸ்திரேலியா காரித்தாசினுடைய பசிபிக் மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாமரிஸ்  பென்ட் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், டோங்காவின் பாதிப்புகளை அறிந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவிகளை செய்து வருவதாகக் கூறும் ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பு, டோங்கியாவிலுள்ள அதன் துணை அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், நிலத்திலுள்ள நிலைமையை மதிப்பிடவும், மிக அவசரத் தேவைகளைத் தீர்மானிக்கவும் முயற்சிக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கே, ஆஸ்திரேலியாவுக்கு தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிஜி நாட்டிற்கு 805 கிலோ மீட்டர் தொலைவில் 169 தீவுகளைக் கொண்டுள்ள டோங்காவிலிருந்து வந்துள்ள சில தகவல்களின் அடிப்படையில், சுனாமி அலைகளால் வாழ்விடங்களை இழந்துள்ள மக்களுக்கு, புதிய குடிநீர் மற்றும் தங்குமிடம் ஆகியவை அவசரத் தேவைகளாக உள்ளன என்று ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பு தெரிவிக்கின்றது.               

Comment