No icon

குடந்தை ஞானி

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு வழங்க ஐரோப்பிய ஆயர்கள் வேண்டுகோள்

உக்ரைன் நாட்டின்மீது இரஷ்யா இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தும் அச்சம் இருக்கும் வேளையில், அனைத்துலக சமுதாயமும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு வழங்கி அந்நாட்டை காக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆயர்கள் விடுத்துள்ளனர். உடனடி அமைதிப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற வேண்டும் எனவும், உக்ரைன் மக்களுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ள ஐரோப்பிய ஆயர்கள், உக்ரைன் எல்லைக்குள் இரஷ்ய இராணுவம் குவிக்கப்பட்டு வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்

CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதங்கள் வழியாக அல்ல, பேச்சுவார்த்தைகள் வழியாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், உக்ரைன் மக்களுக்குத் தங்கள் ஆதரவைத்  தெரிவித்துள்ளனர்ஐரோப்பிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜிந்தாராஸ் க்ருசாஸ் அவர்கள் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, இரஷ்ய துருப்புக்கள் உக்ரைன்மீது தாக்குதல் நடத்தினால், அது உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக மாறும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

Comment