குடந்தை ஞானி
டோங்கா தீவு மக்களுக்கு யுனிசெப் அமைப்பின் அவசரகால உதவி
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jan, 2022
கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் டோங்கா தீவின் 84 விழுக்காட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான அவசரகால உதவியாக 10,000 கிலோ பொருள்கள் அனுப்பப்படுவதாக யுனிசெப் அறிவித்தது.
ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பல் வழியாக அனுப்பப்படும் இவ்வுதவி, இன்னும் ஒருவாரத்திற்குள் டோங்கா தீவை சென்றடையும் எனவும், அதில் குடிநீர், சுகாதார தொடர்புடையவைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் ஆகியவை அடங்கியுள்ளதாகவும், யுனிசெப் எனும் குழந்தைகளுக்கான ஐ.நா.வின் அவசரகால நிதியமைப்பு அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாலும், அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி, மற்றும் கடும்புகையாலும் 36,500 குழந்தைகள் உட்பட 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் டோங்கா தீவு மக்கள், இவ்வியற்கைப் பேரிடரால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, யுனிசெப் அமைப்பு 27 இலட்சம் டாலர்கள் உதவிக்கு விண்ணப்பித்துள்ளது.
Comment