No icon

குடந்தை ஞானி

ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்க ஆயர்கள் வேண்டுகோள்

ஆப்கானில் தாலிபன் ஆட்சியாளர்களின் கொடுமையிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்ந்தோருக்கு ஆஸ்திரேலிய அரசு, தன் உதவிகளை அளிக்கவேண்டும் என அந்நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்தவ சபைகள் மற்றும் உதவி அமைப்புகளுடன் இணைந்து இவ்விண்ணப்பத்தை விடுத்துள்ள கத்தோலிக்க ஆயர்கள், ஆப்கனிலிருந்து புலம்பெயர்ந்து வருவோரை வரவேற்பதோடு, ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள குடும்ப அங்கத்தினர்களுடன் அவர்கள் இணையவும் உதவ வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

மனிதாபிமான முறையில் நாட்டிற்குள் மக்களை வரவேற்கும் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்ற அழைப்பை அரசுக்கு விடுத்துள்ள ஆஸ்திரேலியா ஆயர் பேரவையின் சமூக நீதிக்கானத் துறையின் ஆயர் வின்சென்ட் லாங் அவர்கள், செயல்பாடுடைய இரக்கம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார். ஆப்கானில் வன்முறைகளின் அச்சம் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள நிலையில், 35 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர்.

Comment