No icon

குடந்தை ஞானி

இத்தாலியின் காசென்ஸா பேராலயத்திற்கு வாழ்த்துச் செய்தி

1222 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டதன் 800 ஆம் ஆண்டை கொண்டாடும் இத்தாலியின் காசென்ஸா பேராலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

1184 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, மீண்டும் சீரமைக்கப்பட்டு 1222 ஆம் ஆண்டு பேரரசர் இரண்டாம் பிரடரிக் முன்னிலையில் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் நிக்கோலோ டி சியாரமோண்டி அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்ட  கலேபிரியா மாநிலத்தின் காசென்ஸா பேராலயம் தன் 800 ஆம் ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டி, யூபிலி ஆண்டையும் துவக்கியுள்ளது.

கலை மற்றும் வரலாற்றின் புதையலாக இருக்கும் காசென்ஸா பேராலயத்தின் 800 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களையும், யூபிலி ஆண்டு துவக்கத்தையும் குறித்து, அப்பெரும்மறைமாவட்டப் பேராயர் பிரான்செஸ்காண்டோனியா நோல் அவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த பல நூற்றாண்டுகளாக நன்மைத்தனத்தின் கதிர்களை எங்கும் பரப்பி வந்த இப்பேராலயம், சமுதாயத்தின் ஒன்றிணைந்த வாழ்வுக்கும் சிறப்புப் பங்காற்றியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்

கலேபிரியா தலத்திரு அவையின் மேய்ப்புப்பணி மற்றும் வரலாற்றுப் பாதையில், சமூக நீதி, சட்டரீதி, மனிதமாண்பு ஆகிய துறைகளில் கலேபிரியா பல்கலைக்கழகம் ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் பற்றியும் திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

Comment