No icon

குடந்தை ஞானி

உலகத்தை திருஅவைக்குள் கொண்டு வாருங்கள்

“Provida Mater Ecclesia” என்ற அப்போஸ்தலிக்க விதிமுறை ஏடு வெளியிடப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 2 ஆம் தேதி, புதன்கிழமையன்று செய்தி ஒன்றை அனுப்பினார். பிப்ரவரி 2 ஆம் தேதி, 1947ல், திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள், அப்போஸ்தலிக்க பணித் தொடர்பாக சட்டதொகுப்பு ஒன்றை வெளியிட்டதோடுஉலகுசார் துறவு அமைப்புகளை, கத்தோலிக்க திருஅவையில்  அதிகாரப்பூர்வமான அர்ப்பணிப்பின் புதிய வடிவமாக அங்கீகரித்தார்.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கு முன்னும் பின்னும் திருஅவைக்கு மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ள உலகுசார் துறவு அமைப்புகள் மாநாட்டின் தலைவரான திருமதி ஜோலான்டாஸ்பிலரேவிச் அவர்களுக்கு வழங்கிய செய்தியில், இந்த அடையாளத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் படைப்பு, மற்றும் அர்ப்பணம் நிறைந்த பணிகளை தொடரவும் ஊக்குவிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அர்ப்பணம் மற்றும் உலகுசார் துறவு ஆகிய இரு வேறுபட்ட பரிமாணங்களை சமரசப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தனது கடிதத்தில் எடுத்துக்காட்டும் திருத்தந்தை, அவர்களின் பணிகள் தொடர்புடைய நிலையை மத வாழ்க்கையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ஒரு சாதாரண உலகுசார் துறவு அமைப்பாக இருப்பதால், தூய்மையான உலகுசார் வாழ்வு வாழ்வதற்கு ஆசைப்பட வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குதான் முதன்மையான மற்றும் தீவிரமான அர்ப்பண வடிவத்தை உருவாக்குகிறது  என்றும் வலியுறுத்திக் கூறினார்.

கிரேக்க வார்த்தையானஹாகியோஸ்’ ‘Hagios’  மற்றும் இலத்தீன் வார்த்தையானசாங்க்தூஸ்’ ‘Sanctusஆகிய இரண்டும் தனக்குள்ளேயே எது  ‘நல்லதுஎன்பதை அதிகம் குறிக்கவில்லை, மாறாககடவுளுக்கு சொந்தமானதுஎது  என்பதைத்தான் அதிகம் குறிப்பிடுகின்றது என்பதை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கின் வழியாகநாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்றும், நாம் கடவுளுடனும் ஒருவர் ஒருவருடனும் என்றுமுள்ள ஐக்கியத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுளோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

Comment