No icon

குடந்தை ஞானி

மனித நம்பிக்கைத் தொடர்புகளை ஆழப்படுத்தும் எக்ஸ்போ 2020 பெவிலியன்

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளியன்று இரண்டாவது அனைத்துலக மனித உடன்பிறந்த உணர்வு தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், எக்ஸ்போ 2020யில் உள்ள வத்திக்கான் காட்சிக்கூடத்தின் துணைத் தலைவர் பேரருள்திரு டோமாஸ் டிராஃப்னி அவர்கள், திருத்தந்தையின் எக்ஸ்போ 2020 காட்சிக்கூடத்தின் அமைப்பிற்குப் பின்னால் உள்ள அகத்தூண்டல் பற்றி வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேசினார்.   

இணைப்பை ஆழமாக்குதல்என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட காட்சிக்கூடம், மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே உறுதியான உறவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பேரருள்திரு டோமாஸ் டிராஃப்னி விளக்கிக் கூறினார்.

உண்மையில், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தான் நம்புகிறேன் என்றும், இது பலருக்குத் தெரியாததால், இந்த இணைப்பு மீண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதன் முயற்சியாகவே இது அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்

800 ஆண்டுகளுக்கு முன்பு புனித பிரான்சிஸ் அசிசியாருக்கும் எகிப்திய சுல்தானுக்கும் இடையே நடந்த சந்திப்பு, நட்பை உருவாக்கி, இஸ்லாமியர் குடியேற்றங்களுக்குள் தங்கள் சொந்த வழிபாட்டுத்தலங்களை நடத்தும் வாய்ப்பை பிரான்சிஸ்கன் தந்தையர்கள் பெற வழிவகுத்தது என்றும், புனித பூமியில் உள்ள வரலாற்று இடங்களில் பிரான்சிஸ்கன் தந்தையர்கள் இருப்பதற்கான காரணமும் இதுதான் என்றும் பேரருள்திரு டோமாஸ் டிராஃப்னி அவர்கள் விளக்கினார்.  

எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித உடன்பிறந்த உணர்வு பற்றிய ஆவணம் உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிக்கூடத்தின் வழியாக, நட்பை விட வேறு ஒன்றும் இருக்கிறது என்று நாங்கள் மக்களுக்குச் சொல்கிறோம் என்று கூறிய பேரருள்திரு டோமாஸ் டிராஃப்னி அவர்கள்நாம் வெவ்வேறு கலாச்சாரங்கள், பின்புலங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நிச்சயமாக நாம் நண்பர்களாகவும், சகோதரர் சகோதரிகளாகவும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு இது வழிகாட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

Comment