No icon

குடந்தை ஞானி

சிறுமிகள் மற்றும் பெண்கள் இல்லாமல் மனித சகோதரத்துவம் இல்லை

பிப்ரவரி 3 ஆம் தேதி, வியாழக்கிழமையன்று, மனித உடன்பிறந்தஉணர்வு நிலைக்கான உயர் குழு உறுப்பினர் லேமா ஜிபோவி அவர்கள், உலகளவில் மனித உடன்பிறந்த உணர்வு நிலையை மேம்படுத்துவதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கானுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்

லைபீரிய அமைதி ஆர்வலரும், பெண்கள் வழக்கறிஞரும் மற்றும் 2011ல் அமைதிக்கான நோபல் விருது வென்றவருமான லேமா ஜிபோவி அவர்கள், கடவுளின் படைப்பில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பெண்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி, தான் வழங்கிய செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.   

பல ஆண்டுகளாகப் பெண்களும் சிறுமிகளும் ஒடுக்கப்பட்டு வருவதுடன், மிகப்பெரும் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தெரிவித்த  லேமா ஜிபோவி அவர்கள்அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் தொடர்ந்து அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தனது வருத்தத்தையும் பதிவுசெய்துள்ளார்.   

காலநிலை நெருக்கடியாலும் கடத்தல் போன்ற சமூகத் தீமையாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுமிகளும்தான் என்பதை எடுத்துக்காட்டிய  லேமா ஜிபோவி அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் படைப்பு என்றும், நாம் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும்  இந்த ஆவணம் கூறுவதாக  எடுத்துரைத்துள்ளார்

நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில், மனித உடன்பிறந்த உணர்வு நிலைக் குறித்த ஆவணத்தின் பெரும்பகுதி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காகத் தான் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட லேமா ஜிபோவி அவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் இல்லாமல் மனித உடன்பிறந்த உணர்வு நிலை ஏற்பட சாத்தியமில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்

 

Comment