No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

குழந்தைகளைக் காக்க அழைக்கும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

சிறார் இராணுவ வீரர்களின் குழந்தைப் பருவமும், வருங்காலமும் திருடப்படுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து திருத்தந்தை பிரான்சிஸ் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆயுதம் ஏந்தவைக்கப்படும் சிறாரின் குழந்தைப் பருவமும், அவர்களின் அப்பாவித்தனமும், வருங்காலமும், பல வேளைகளில் அவர்களின் முழுவாழ்வுமே திருடப்படுகிறது. அவர்களின் இளம்கைகளில் பெரியோர்களால் ஆயுதங்கள் திணிக்கப்படும் நிலைகுறித்து எழுப்பப்படும் கூக்குரல் இறைவனை நோக்கி எழும்புகிறதுஎன, பிப்ரவரி 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தி உரைக்கிறது

மேலும், இதேநாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “துயருறுவோரின் அருகில் சென்று அவர்களுக்கு உதவுவது, அவர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அதிலிருந்து வெளிப்படும் வழிகளை அவர்களுக்குக் கொணர்வது, ஆகியவை வழியாக வாழ்வின் அர்த்தத்தை கண்டுகொள்வோம்”, என அழைப்புவிடுத்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை 3747 டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் அவரை 1 கோடியே 88 இலட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.        

Comment