திருத்தந்தை பிரான்சிஸ்
லித்வேனியாவில் துயருறும் புலம்பெயர்ந்தோருக்குத் திருத்தந்தை உதவி
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Tuesday, 15 Feb, 2022
லித்வேனியாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் கோவிட் பெருந்தொற்றாலும், கடுங்குளிராலும் துன்புறும் மக்களுக்கு உதவுவதெற்கென 50 ஆயிரம் யூரோக்களைத் திருத்தந்தை வழங்கியுள்ளதாக ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீட அவை அறிவித்துள்ளது.
லித்வேனிய எல்லைப் பகுதியில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கென லித்வேனிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் வழியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இத்தொகை, அவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் குளிர்கால உடைகள் வாங்க பயன்படுத்தப்படும் என மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீட அவை உரைக்கிறது.
கடந்த ஆண்டின் இறுதியிலும், இவ்வாண்டின் துவக்கத்திலும் ஞாயிறு மூவேளை ஜெப உரைகளில், லித்வேனிய கிழக்கு எல்லைப் பகுதிகளில் துயருறும் புலம்பெயர்ந்தோர் குறித்து கவலையை வெளியிட்டதன் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் இந்நிதியுதவியை வழங்கியுள்ளார்.
Comment