No icon

குடந்தை ஞானி

சிறுபான்மையினரின் மனுவை நிராகரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தேவை எனக் கோரிய மனு ஒன்றை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி திங்கள்கிழமையன்றுஉச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை நிராகரித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய பாராளுமன்றத்தில் தற்போது நான்கு கிறிஸ்தவர் மற்றும் ஆறு இந்து உறுப்பினர்கள் உள்ள நிலையில், 342 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மதச் சிறுபான்மையினருக்கான இடங்களை 10ல் இருந்து 14 ஆக அதிகரிக்க வேண்டும் எனக் கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் நீண்ட காலமாகக்  கோரிக்கை விடுத்துவந்த நிலையில் இந்த மனுமீதான தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இம்மனுவின் விசாரணையில், அரசியலமைப்பைத் திருத்துவதற்குப் பாராளுமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள  நீதிபதி இஜாசுல் அஹ்சன் அவர்கள்நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் இடங்களை அதிகரிக்க நீதிமன்றம் எப்படி முடிவு எடுக்க முடியும், என்றும் கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது, மத சிறுபான்மையினர் மாநில சட்டசபைகளில் 33 இடங்களிலும், மக்களவையில் நான்கு இடங்களிலும் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் பாகிஸ்தானில் உள்ள 118 மில்லியன் வாக்காளர்களில் 3.63 மில்லியன் அல்லது 3.5 விழுக்காடுதான் சிறுபான்மையின வாக்காளர்கள் என்றும் அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

Comment