No icon

குடந்தை ஞானி

உக்ரைன் சிறாருக்காக திருத்தந்தை இறைவேண்டல்

மார்ச் 16 ஆம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், மிலான் நகரின் லா ஜொல்லா  தொழிற்பயிற்சிப் பள்ளியிலிருந்து வந்திருந்த  ஏறத்தாழ இரண்டாயிரம் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், உக்ரைன் நாட்டை, போர் தொடர்ந்து அழித்துவரும் வேளையில், குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் உக்ரைன் நாட்டுச் சிறாருக்காக அவர்களோடு இணைந்து  செபித்தார்.

ஆண்டவராகிய இயேசுவே, வயதுவந்தோரின் ஆணவத்திற்குப் பலியாகும் உக்ரைன் நாட்டுச் சிறாரை கண்ணோக்கும் அவர்களை ஆசீர்வதித்தருளும் மற்றும் பாதுகாத்தருளும் என்று செபித்த திருத்தந்தை, போரை எதிர்கொள்கின்ற, அதனால் துயருறுகின்ற மற்றும் சாப்பிட உணவின்றி, கட்டாயமாகத் தங்கள் வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறுகின்ற சிறுவர் சிறுமியரை நினைத்துப் பாருங்கள் என்று, லா ஜொல்லா பள்ளியின் இளையோரிடம் கூறினார்.

Comment