No icon

குடந்தை ஞானி

ஆகஸ்ட் 28 இல், திருத்தந்தை லீ அக்குய்லா நகரத்தைப் பார்வையிடுகிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இத்தாலியின் லீ அக்குய்லா நகரத்திற்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு, மன்னிப்பு வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவார் என திருப்பீடம், ஜூன் 4 ஆம் தேதி சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் சேதமடைந்த, மத்திய இத்தாலியிலுள்ள அப்ருசோ மாநிலத்தின் லீ அக்குய்ல நகருக்கு, வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி செல்லத் திட்டமிட்டுள்ள திருத்தந்தை, அந்நகரில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றுவார். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை தெரிவிப்பார். திருத்தந்தை 5 ஆம் செலஸ்டின் அவர்கள் வழங்கிய, நிரந்தர நிறைபேறுபலன்களை, “மன்னிப்பு வழிபாடாகலீ அக்குய்லா நகர கத்தோலிக்கர், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் 28, 29 ஆகிய இரு நாள்களில் சிறப்பிக்கின்றனர்.

21 புதிய கர்தினால்கள்

ஆகஸ்ட் 27 ஆம் தேதி, 21 புதிய கர்தினால்களுக்கு சிவப்பு தொப்பி வழங்கும் நிகழ்வை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள், புதிய கர்தினால்கள் என அனைவரும், ஆகஸ்ட் 27,28,29 ஆகிய மூன்று நாள்களில், திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தம் குறித்த Praedicate Evangelium திருத்தூது கொள்கை விளக்கம் குறித்து சிந்திக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம், ஜூன் 5 ஆம் தேதி ஞாயிறன்று நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Comment