திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் திருவழிபாட்டு விபரங்கள்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 19 Jun, 2019
பிப்ரவரி 27 அன்று திருத்தந்தையின் திருவழி பாடுகளுக்கு பொறுப்பாளரான பேரருள்திரு. குய்தோ மரினி அவர்கள் திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் மாதங்களின் திருவழிபாடுகளைப்பற்றிய தகவலை வெளியிட்டார்.
மார்ச் 6 திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு உரோம் புனித சபீனா பசிலிக்காவில் பாவ மன்னிப்புத் திருப்பவனியும், அதைத் தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றும் திருத்தந்தை, மார்ச் 10 ஆம் தேதி அரிச்ச்h ஊரில் திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தினை மேற்
கொள்கின்றார். மார்ச் 10 வெள்ளியன்று தியானத்
தினை முடித்துவிட்டு உரோம் திரும்பும் திருத் தந்தை, மார்ச் 29 வெள்ளிக்கிழமை மாலை
5 மணிக்கு வத்திக்காள் புனித பேதுரு பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நடத்துவார். தொடர்ந்து மார்ச் 30, 31 தேதிகளில் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார்.தொடர்ந்து பெரிய வார வழிபாடுகள் அனைத்தையும் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடத்துகின்றார்.
Comment