ஏழைகளின் அழுகுரல் கேட்பது குறித்த கருத்தரங்கு
- Author குடந்தை ஞானி --
- Thursday, 20 Jun, 2019
மார்ச் 7 முதல் 9 வரை வத்திக்கானில் மதங்களும், நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளும்: இப்புவியின் ஏழைகளின் அழுகுரலைக் கேட்பது என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இக்கருத்தரங்கின் நோக்கத்தினைப் பற்றி எடுத்துரைத்தார்.
நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை வடிவமைப்பது குறித்து உலகளாவிய கூட்டங்கள் மற்றும் உச்சி மாநாடுகளில் விவாதங்கள் நடத்துகின்றோம். நம்மிடம் வளர்ச்சித் திடட இலக்குகள் உள்ளன. ஆவற்றினை அமல்படுத்துவதற்கு நேரம் வந்திருக்கின்றது. ஐ.நா. கூட்டத்தில் 190 க்கும் அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்ட 17 வளர்ச்சித்திட்ட இலக்குகள் செயல்படுத்தபட வேண்டியதன் உடனடி தேவைபற்றி அலசப்பட்டது.
உலகின் வளர்ச்சியில் மதங்களின்
பங்கு அளப்பரியது. நூற்றாண்டுகளாக சமுதாயத்தின் ஒரு மூலைக்கல்லாக அமைந்துள்ள கல்வியை வழங்குவதில் மதங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன என்றார்.
Comment