நோயைக் குணமாக்குதல் மனிதரை குணமாக்குதலாகும்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 20 Jun, 2019
மார்ச் 2, 2019 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரத்த புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உதவும் இத்தாலிய தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் ஆயிரம் பேரைச் சந்தித்து உரையாடினார்.
நோயைக் குணப்படுத்துவதற்காக, மனிதரின் உயிரியல் கூறுகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவ சிகிச்சை என்பது நோயின் துன்பமான நேரங்களில் நோயாளர்களோடு இருப்பதாகும். நோய்களால் துன்புறும் மக்களின் வேதனைகளைக் குறைக்கும் நோக்கத்தில் நடைபெறுகின்ற ஆராய்ச்சிகள் அனைத்தையும் திருஅவை ஊக்கப்படுத்துகின்றது என்று திருத்தந்தை கூறினார். மருத்துவர்கள், உயிரியல் ஆய்வாளர் கள், பரிசோதனை நிலையங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை, ஆன்மிக அளவில் வெறுமையை உணரும் சமயங்களில் உதவவேண்டும் என்றார். நோயைக் குணமாக்குவது என்பது உடல் உறுப்பையோ அல்லது திசுக்களையேர் குணமாக்குவது மட்டுமல்ல, மாறாக முழு மனிதரையும் குணமாக்குவதாகும் என்றார்.
நீண்ட காலமாகப் புற்றுநோய்களால் துன்புறும் மக்கள், இவ்வுலகிலிருந்து, உறவுகளிலிருந்து, அன்றாடவாழ்விலிருந்து பிரித்து வைக்கப்பட்டதாக உணரலாம். அவர்களின் நோய்களும், வழங்கப்படும் சிகிச்சைகளும் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பலாம். ஆயினும் அவர்கள் தனியாக இல்லை. வேதனைகளை அனுபவித்தவரும், சிலுவையில் உயிர்விட்ட ஆண்டவர் இயேசு அவர்களுக்கு அருகில் இருக்கின்றார்.
Comment