திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப்பணியில் ஆறு ஆண்டுகள்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 20 Jun, 2019
மார்ச் 13 அன்று கத்தோலிக்க திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆறாம் ஆண்டினை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுககு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்கின்றனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் நாற்பது நாடுகளில் 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தந்தை அபுதாபிக்கு மேற் கொண்ட பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும். குடும்பம், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றங்கள் உட்பட மூன்று உலக ஆயர்க்ள மாமன்றங்களையும், திருஅவையில் சிறியோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு மாமன்றத்தையும் திருத் தந்தை வழிநடத்தியுள்ளார். அக்டோபரில் நடைபெறவிருக்கும் அமேசான் பகுதிக்கென ஆயர்கள் மாமன்ற தயாரிப்பும் திருஅவையில் இடம்பெற்று வருகின்றது.
திருஅவை யின் வாழ்வின் மையத்தில் எல்லாரும் ஒன்றிணைந்து வருவதன் முக்கியத்துவம், திருத்தந்தை
யின் தலைமைப் பணியில் தெளிவாகத் தெரிகின்றது என பலர் கருத்து தெரிவித் துள்ளனர். அபுதாபி பயணத்தின் போது, எகிப்தின் பெரிய குரு அல் அஸார் உடன்
இணைந்து மனித உடன்பிறந்த நிலை
பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை
யொன்றினை வெளியிட்டார். நம் பொது
வான இல்லமாகிய இப்பூமியை பாது காத்தலை வலியுறுத்தும் திருத்தந்தை, காலத்திற்கேற்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
Comment