No icon

உலகில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கையாளர்கள்

மார்ச் 7 அன்று வத்திக்கானில்  தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ’மதங்களும், நீடித்த வளர்ச்சித் திட்டங்களும்’ எனும் தலைப்பில் ஓர் அமர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் பேசும் போது, உலக மக்கள் தொகையில் ஏறக:குறைய எண்பது விழுக்காட்டினர் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், உலகின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.
பூமியின் நலன் மனிதரின் நலனாகும். இக்கருத்தரங்கில் உரையாற்றியவர்கள், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் வறுமை, பசி, காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளைக் களைவது பற்றி தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் உரையாற்றிய இந்து மத ஆர்வலரான வந்தனா சிவா அவர்கள், இப்பூமியின் நலனுக்கும், மனிதரின் உடல்நலனுக்கும் உதவுவதற்கு மனிதர் வாழும் முறையிலும், தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருள்களிலும் மாற்றம் அவசியம் என்றார். வறுமை, பசி மற்றும் காலநிலை மாற்றப்ப பிரச்சினைகளுக்கு எதிராய் நடவடிக்கை எடுப்பது பற்றி பேசியபோது, வேதிய பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத உற்பத்திப்பொருள்களைப் பயன்படுத்துவதன் வழியாக பூமியையும், மனிதரின் உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும் என்றார். 400 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு மார்ச் 9 ம் தேதி நிறைவடைந்தது.

Comment