No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

அன்போடும் கீழ்ப்படிதலோடும் கத்தோலிக்கப் பள்ளிகள் செயல்படவேண்டும்

கத்தோலிக்க பள்ளிகள் இயேசுவின் பண்புகளான அன்பு மற்றும் கீழ்ப்படிதல் கொண்டு செயல்படவேண்டும் என்றும், உலகளாவிய வகையில் புதிய சூழ்நிலைகள் மற்றும் கருத்துக்களை கற்றலில் உருவாக்க வேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 01 ஆம் தேதி வியாழன் முதல் 03 ஆம் தேதி சனிக்கிழமை வரை பிரான்ஸ் நாட்டில் உள்ள மர்சீலியாவில் நடைபெற்ற உலகளாவிய கத்தோலிக்கப் பள்ளிகளுக்கான மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார். இயேசு தன் சீடர்களை அன்போடு நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார், கீழ்ப்படிதலோடு தானும் செயல்பட்டு அவர்களையும் அதுபோல் செயல்பட வைத்தார் என்றுரைத்த திருத்தந்தை, கத்தோலிக்கப் பள்ளிகள் சமூக பிரச்சனைகளை களையவும் உலகளாவிய முறையில் திறந்த மனதுடன் செயல்படவும் வலியுறுத்தினார்.

சமுதாயத்தை பொறுத்தவரை கல்வி தவிர்க்க முடியாத கடமை ஆனால் கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரை நற்செய்தி அறிவிப்பு மற்றும் இறைத்திருவுளச் செயல்பாட்டின் வடிவம் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். அறிவைப் பெறுவதற்கான திறனை மட்டுமல்லாமல், தன்னை அறிந்து கொள்ளவும், நேசிக்கவும் திறன் பெற்றவர்கள் என்பதை அங்கீகரிக்கக் கல்வி உதவுகிறது எனவும், குடும்பம், சமூகம் போன்றவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்பு கொண்டு, பல்வேறு கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடமாக பள்ளி கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அன்பு மற்றும் கீழ்ப்படிதல்

இயேசு தனது சீடர்களை தனது உடலின் உறுப்புக்களாக அவரவர் விரும்பியபடி நற்செய்தியை அறிவிக்க அனுப்புகின்றார்அன்போடு ஒற்றுமையாக இணைந்து செயல்பட வலியுறுத்துகின்றார் என்று கூறிய திருத்தந்தை, பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கீழ்ப்படிதலோடு உலகின் எல்லைவரை, சீடர்களைப் பணி செய்ய அனுப்பிய இயேசு போன்று  கத்தோலிக்க பள்ளிகள் சமூக பிரச்சனைகளை வரவேற்கவும், உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும்புதிய சூழ்நிலைகள் மற்றும் புதிய கருத்துகளுக்கு மனதை திறக்க கற்றுக்கொடுக்கவும் திருத்தந்தை வலியுறுத்தினார்

அறிவைக் குவிப்பதில் மட்டும் திருப்தியடையாத ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவதும் கத்தோலிக்கப் பள்ளிக்கல்வியின் அவசியம் எனவும், இவை அனைத்தும் கடவுளின் உதவி மற்றும் அனைவரின் ஆதரவின்றி நாம் செய்ய முடியாத ஒரு கைவினைஞர் வேலையை அடையாளப்படுத்துகிறது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

Comment