No icon

மொராக்கோவில் நம் திருத்தந்தை - சமய சுதந்திரம் மேலும் தேவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொராக்கோ நாட்டுத் திருத்தூதுப் பயணத்தை
மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் மேற்கொண்டுள் ளார். இவ்வேளையில், அந்நாட்டிற்கு மிகவும்
தேவைப்படும் சமய சுதந்திரம் வழங்கப்படு வதற்கு, திருப்பீடம் தலையிடு
மாறு, அந்நாட்டு கிறிஸ்தவர்கள்
அவை, கேட்டுக்கொண்டுள் ளது.  
இதுகுறித்து  மொராக்கோ கிறிஸ்தவர்கள்  திருஅவை  ‘அல் மஸ்ஸே‘  எனப்படும் தினத்தாளில், இந்த விண்ணப்பத்தை வெளிப் படையாக வெளியிட்டுள்ளது, 
மொராக்கோவில் கிறிஸ்தவர்களின் சமய சுதந்திரத்தில் சில கூறுகள் மீறப்படுகின்றன என்றும், தவறான குற்றச்சாட்டு நடவடிக்கை களில், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில், மொராக்கோ பாதுகாப்புப் படைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும், அந்த அவை குறிப்பிட்டுள்ளது.  மொராக்கோ நாட்டை சகிப்புத்தன்மை கொண்டதாய் அமைப்பதில், மொராக்கோ கிறிஸ்தவர்கள் அவை எடுத்துவரும் முயற்சிகளை, அந்நாட்டு அரசர் 4 ஆம் முகமது அவர்கள் அங்கீகரித்துள்ளார் என, பீதேஸ் செய்தி கூறுகின்றது.
மொராக்கோ நாட்டுக் கிறிஸ்தவர்கள் அவை, சமய
உரிமைகள் மற்றும், சமய சுதந்திர
அவை, மொராக்கோ மனித உரிமைகள் கழகம் ஆகியவற்றை ஆதரிக்கின்றது. மொராக்கோ மக்கள் தொகையில், பெரும் பான்மையினர் முஸ்லிம்கள். திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர் கள் 1.1 விழுக்காட்டி னர் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்த கட்டுரைகள் பின்வரும் நம் வாழ்வு இதழ்களில் இடம்பெறும். 
 

Comment