No icon

பிப்ரவரி 16-வியாழன்

இறைவார்த்தை, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது

அனைவருக்கும் பறைசாற்றப்படும் இறைவார்த்தை, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது என்று தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரி 16,  வியாழனன்று வெளியான குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவார்த்தையால் நிரப்பப்படும்போது, அது நம் இதயங்களையும் மனதையும் மாற்றுகிறது என்றும்அது நம்மை மாற்றி, நம் வாழ்க்கையை இறைவனிடம் கையளித்து அவர் நம்மை வழிநடத்த உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

பெற்ற கொடையை பகிர்ந்துகொள்வோம்

இயேசுவைச் சந்திப்பது, அவரை அறிந்துகொள்வது மற்றும் நாம் அன்பு கூரப்படுகிறோம், மீட்கப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிப்பது ஆகியவை நற்செய்தி அறிவிப்பின் மிகப்பெரிய கொடை என்றும், இந்தக் கொடையை நாம்  நம்மிடம் மட்டுமே வைத்திருக்க முடியாது, மாறாக, அதைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், பிப்ரவரி 15,  புதனன்று வெளியிட்ட முதல் குறுஞ்செய்தியில்  திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் துயருறுவோருக்காக செபிப்போம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை நாம் மறந்து விடக்கூடாது. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து செபிப்போம் என்றும், உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ உறுதியான அர்ப்பணிப்பை மேற்கொள்வோம் என்றும், இந்தப் பெருந்துயரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் ஆறுதலைத் தருவாராக என்றும் பிப்ரவரி 15,  புதனன்று வெளியிட்ட இரண்டாவது குறுஞ்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Comment