No icon

மார்ச் - 13

தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவிற்காக தபால்தலை வெளியீடு

வருகின்ற மார்ச் 13 ஆம் தேதி  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைத்துவப் பொறுப்பேற்று பத்தாண்டுகள் நிறைவுறுவதை சிறப்பிக்கும் வகையில் வத்திக்கானால் நான்கு முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்தும் விதமாக தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளன.

பிப்ரவரி 27 ஆம் தேதி திங்கள் கிழமை வெளியிடப்பட உள்ள இத்தபால் தலைகளில், திருத்தந்தையின் பத்தாமாண்டு நிறைவுஉயிர்ப்புப்பெருவிழா, 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு, கணிதவியலாளர் மற்றும் வானியலாளரான  நிக்கோலோ கோப்பர்னிகோ அவர்களின் 550 ஆவது ஆண்டு ஆகிய ஆண்டுகளை சிறப்பித்தும் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளன.

தலைமைத்துவப் பணியின் பத்தாவதாண்டு நிறைவு

திருத்தந்தையின் தலைமைத்துவப் பணியின் பத்தாண்டுகளில் நான்கு முக்கிய சிறப்பு நிகழ்வுகளை அடையாளப்படுத்தும் விதமாக வெளியிடப்பட உள்ள தபால்தலைகள், முதலாவதாக, 2013 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி தலைமைத்துவ பொறுப்பேற்ற திருப்பலியில் திருத்தந்தை, இரண்டாவதாக  2016  நவம்பர் 20. ஆம் தேதி வெளியான  மிசெரிகார்டியா எட் மிசேரா என்னும் திருத்தூதுக் கடிதம் எழுதப்பட்டு இறைவார்த்தை நாள் திருப்பலியில் நற்செய்தியை முத்தமிடும்போது திருத்தந்தை, மூன்றாவதாக,  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 மனந்திரும்புதலை வெளிப்படுத்தி இறைஇரக்கத்தின் ஜூபிலிவிளைவாக 24 மணிநேரம் நற்கருணை ஆராதனை முயற்சியை நினைவுபடுத்தும் திருத்தந்தை, இறுதியாக, நான்காவது மதிப்பில்2013, ஆகஸ்ட் 8ஆம் தேதி, லாம்பதுஸா கடலில் இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் திருத்தந்தை ஆகிய நான்கு படங்கள் வெளியிடப்பட உள்ளன.

மேலும் திருத்தந்தைக்கு ஆயிர வருட பாரம்பரியம் கொண்ட மீனவராகிய பேதுருவின் மோதிரத்தை அணிவிக்கும் தபால் தலையும், கணிதவியலாளர் மற்றும் வானியலாளரான  நிக்கோலோ கோப்பர்னிகோ அவர்களின் 550 ஆவது ஆண்டு நிறைவிற்கான தபால் தலையும் , ஆப்ரிக்க கண்டத்தில் நற்செய்திப்பணி மற்றும் ஒருங்கிணைந்த பயணம் என்பதைக் குறித்த தபால் தலைகளும் வெளியிடப்பட உள்ளன

Comment