No icon

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம்

இயற்கை சீற்றங்களால் துயருறுவோரை நினைவுகூர்வோம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், உக்ரைன் போர் மற்றும் நியூசிலாந்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பிப்ரவரி 19,  ஞாயிறன்று, தனது மூவேளை ஜெபவுரையின்போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இயேசுவின் அன்பு, துயருறும் மக்களால் நம்மைத் தொட அனுமதிக்கும்படி கேட்கிறது" என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளோரையும், போர், வறுமை, சுதந்திரமின்மை அல்லது சுற்றுச்சூழல் அழிவுகளால் பாதிக்கப்படும் அன்பான உக்ரேனிய மக்களைத் தான் நினைவு கூர்வதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பேரழிவுகரமான சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து மக்களுடன் தான்  நெருக்கமாக இருக்கிறேன் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகோதரர் சகோதரிகளே, துயருறுவோரை மறந்துவிடாமல், நமது பணிகள் மிகவும் அக்கறை நிறைந்ததாகவும்உறுதியானதாகவும் இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நியூசிலாந்தில்கேப்ரியல்சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஞாயிறன்று 11 ஆக உயர்ந்துள்ளதுடன், நாட்டின் வடக்குத் தீவை புயல் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை எட்டியுள்ளது.

Comment