No icon

திருத்தந்தை

சட்டம் இல்லாத சமூகம், உரிமைகளற்ற சமூகம்

சட்டம் இல்லாத சமூகம், உரிமைகளற்ற சமூகம் என்றும் நற்செய்தி இல்லாமல் சட்டம் இல்லை, சட்டம் இல்லாமல் நற்செய்தி இல்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான, திருஅவையின் உச்ச நீதிமன்றத்தின் நீதி மேய்ப்புப்பணி பயிற்சியில் பங்குகொள்வோரைச் சந்தித்த போது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.

சட்டங்கள் அதன் அடிப்படைத் தேவைகளைப் பாதுகாத்தல், நியாயமான முறையில் தீர்வு அளித்தல் போன்றவற்றின் வழியாக, திருஅவை வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் வழியாக நற்செய்தி அறிவிப்பு முதன்மையான நீதித்துறை அர்ப்பணிப்பாக திகழ்கின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஒவ்வொரு நபருக்கும் சமூகத்திற்கும் கிறிஸ்துவை சந்திப்பதற்கான உரிமை உள்ளது என்றும், அனைத்து விதிமுறைகளும் சட்டச்செயல்களும் இச்சந்திப்பின் நம்பகத்தன்மைக்கு பலனளிக்கின்றன என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, மிக உயர்ந்த  சட்டம் என்பது ஆன்மாக்களின் மீட்பாகும் என்றும் கூறினார். சட்டம் இல்லாத சமூகம் உரிமைகள் இல்லாத சமூகமாக இருக்கும் மற்றும் சட்டம் என்பது அன்பின் நிபந்தனை என்று எடுத்துரைத்த திருத்தந்தை, விதிமுறைகள், செயல்முறைகள், தடைகள் ஆகியவற்றை பணியில் கையாண்டாலும் உரிமைகளை ஒருபோதும் இழக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பணியின் மையத்தில் மக்களை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, இந்த உரிமைகள் தன்னிச்சையான உரிமைக்கோரல்கள் அல்ல என்றும் திருஅவை வாழ்வில் நீதியின் உண்மையை ஒளிரச் செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் எடுத்துரைத்தார். நீதித்துறைப் பணியானது நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு பெரும் பங்களிப்பைத் தருவதாகவும், பொது நலனுக்கான பொதுவான தேவைகள் அல்லது செயல்களின் முறைகள் புறக்கணிக்கப்படாத வகையில் அனைத்தும் ஒரு உண்மையான நீதிக்குள் இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஒன்றாக நடப்பது, ஒருவருக்கொருவர் செவிமடுப்பது மற்றும் தூயஆவியானவரை அழைப்பது, சரியான நீதிபதிகளாக இருப்பதற்கு இன்றியமையாதது என்று எடுத்துரைத்த திருத்தந்தைதலத்திரு அவைகளுக்கு சேவை செய்வதற்காக எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாழ்மையான மற்றும் நிலையான விருப்பத்துடன், அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர்களின் கருத்தைப் பெற, ஆலோசனை கேட்க வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Comment