அருள்பணியாளர் டேவிட் பன்சாடோ
நம்பிக்கை என்னும் நங்கூரம் - திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Friday, 24 Feb, 2023
கடலில் இருந்தாலும் ஆற்றில் இருந்தாலும் உறுதியாக இருக்க நங்கூரம் என்னும் நம்பிக்கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், வலி கடினமான சூழ்நிலைகளில் கடவுள் என்னும் நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசையான கனாலே 5 இல் ஒளிபரப்பான " I Viaggi del Cuore " அதாவது இதயத்தின் பயணம் என்ற நிகழ்ச்சியில் அருள்பணியாளர் டேவிட் பன்சாடோ என்பவருக்கு அளித்துள்ள நேர்காணலின் போது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
வாழ்க்கை என்னும் கடலில் நம்பிக்கை என்னும் நங்கூரத்தைப் பிடித்துக் கொண்டு செல்லுங்கள் என்றும், அடிவானத்தைப் பார்க்கவில்லை என்றால், நம்மால் நங்கூரத்தை வீச முடியாது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, ஆண்டவரில் நம்பிக்கை வைத்து கடினமான, துன்பமான, வலி நிறைந்த வாழ்வில், பயணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தையின் பத்தாண்டு தலைமைத்துவப் பணியின் தொடக்கம் முதல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரேன் போர் வரையிலான கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்த திருத்தந்தையின் நேர்காணல்கள் பிப்ரவரி 18 சனிக்கிழமை மற்றும் 19 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இத்தாலிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.
கெட்ட விஷயங்களில் ஈடுபாடு கொள்ளாதீர்கள், மனித அழிவு, சிறாரின் புன்னகை, போர், வெவ்வேறு எல்லைகளைப் பார்த்தல், நம்பிக்கை, செல்வம் என்பது பாவம் அல்ல இதயத்தை திறத்தல் என்பன போன்ற பல கருத்துக்களை இந்நேர்காணலில் திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்து கொண்டார். இது பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று "உங்கள் அடிவானத்தைத் தேடுங்கள்" என்ற தலைப்பில் பீம்மே வெளியிட்ட புத்தகத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
Comment