No icon

கர்தினால் மாரியோ கிரெக்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புக் குழுவின் 7 உறுப்பினர்கள்

2023, இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புக் குழுவில் ஒரு அருள்சகோதரி உட்பட  ஏழு உறுப்பினர்களை அம்மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் நியமித்துள்ளார்இயேசுசபை அருள்பணியாளர் ஜியாகோமோ கோஸ்டா, பேராயர் திமோதி ஜான் காஸ்டெல்லோ, ஆயர் டேனியல் நு, ஆயர் லூசியோ ஆண்ட்ரிஸ் முவாண்டுலா, அருள்பணியாளர் டாரியோ விட்டலி மற்றும் பேரருள்திரு டோமாஸ் டிராஃப்னி மற்றும் கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலெரிச் ஆகியோர் அந்த ஏழு உறுப்பினர்கள் ஆவர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி புதன்கிழமையன்று, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாராகும் வகையில் உலகளாவியமரியன்னை இறைவேண்டல் நாள்அந்தந்த நாடுகளின் ஏதாவது ஒரு மரியன்னை திருத்தலத்தில் நடத்தப்படும்  என்றும் இவ்வாயர் மாமன்றச் செயலகத்தால் முன்மொழியப்பட்டது.

ஆயர்கள் மாமன்றச் செயல்முறையின் முக்கியத்துவத்தை இறைமக்களுக்கு உணர்த்துவதும், இறைவேண்டலில் ஈடுபட நம்பிக்கையாளர்களை வலியுறுத்துவதும் மற்றும் திருஅவையின் முழு சினோடல் செயல்முறையையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் வைப்பதும் இதன் நோக்கமாக எடுத்துக்காட்டப்பட்டது.

எந்த மரியன்னையின் திருத்தலத்தில் இவ்விறைவேண்டலை நடத்துவது என்பதை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஆயர்பேரவை முடிவு செய்யும் என்றும், இந்த இறைவேண்டல் வழிபாட்டில் பொதுநிலையினர், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியரின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும் ஆயர் மாமன்றச் செயலகத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

               

 

 

 

 

 

 

 

 

Comment