No icon

திருத்தந்தை

மக்களை நிராகரிக்கும் உலகில் அமைதிக்கு வழியில்லை

அதிகாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஊடுருவல் வழியாக மக்களை அடிபணியச் செய்வதும் சுரண்டுவதும் ஒரு குற்றமாகும் என்றும், மக்களை ஒடுக்கும் மற்றும் நிராகரிக்கும் உலகில் அமைதிக்கான சாத்தியம் இல்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் வத்திக்கானின் பியோ நான்காம் அரங்கத்தில் திருப்பீட சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதார மற்றும் கருத்தியல் காரணங்களுக்காக மக்கள் சுரண்டப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் கண்டித்துள்ளார்.

இன்றைய உலகின் தந்திரமான நவீன காலனித்துவம் ஒரு குற்றம் என்றும், அது அமைதிக்குத் தடையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் பல்வேறு அரசியல் ஆதிக்க செயல்முறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்த சில நம்பிக்கையாளர்களின் செயல்களுக்காக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"காலனித்துவம், மறுகாலனித்துவம் மற்றும் புதிய காலனித்துவம்: சமூக நீதி மற்றும் பொது நன்மையின் ஒரு முன்னோக்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டமானது, திருப்பீடத்தின்

சமூக அறிவியலுக்கான பல்கலைக்கழகம், சமூக உரிமைகள் மற்றும் பிரான்சிஸ்கன் கோட்பாடு குறித்த நீதிபதிகளின் குழு மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

Comment