No icon

திருத்தந்தை

இறைத்தந்தையின் இரக்கம் அதிகம் தேவைப்படுகிறது

உலகம் போரை எதிர்கொண்டாலும் கடவுளின் இரக்கம் நம்மை ஒருபோதும் கைவிடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஏப்ரல் 12,  புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தான் வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் இரக்கமுள்ளவராக இருப்பதை நிறுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.

திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், ‘அவனியில் அமைதிஎன்ற திருமடலை வெளியிட்டதன் 60-ஆம் ஆண்டு நிறைவுறும்வேளைஎண்ணற்ற போர்களை தாங்கி நிற்கும் நமது உலகில் அமைதிக்கான தனது செபங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் புதுப்பித்துக்கொண்டுள்ளார்.

இறைத்தந்தையின் இரக்கம் இன்னும் தேவை

"இன்று, உலகம் போர்களாலும், கடவுளை விட்டு விலகியதாலும் அதிகமாக சோதிக்கப்படுவதால், நமக்கு இறைத்தந்தையின் இரக்கம் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இரக்கம் குறித்துச் சிந்திப்போம் என்றும், அது எப்போதும் நம்மை வரவேற்கிறது மற்றும் நமக்குத் துணையாகச் செல்கிறது, நம்மை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார்.

உண்மை, நீதி, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைதி

அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்டஅவனியில் அமைதிஎன்ற திருமடலை திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள் பனிப்போரின் போது நிகழ்ந்த பதட்டங்களின் உச்சத்தில் எழுதினார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருமடல், அனைவருக்கும் அமைதியைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பைத் தந்து, மக்களிடையே அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழியை வகுத்தது என்றும் தெரிவித்தார்.

இருண்ட மேகங்களுக்கு மத்தியில் ஒளியின் கதிர் போல, அவரது இந்தத் திருமடல்  மனிதகுலத்திற்கு ஒரு உண்மையான ஆசீர்வாதம் என்றும் அவரது செய்தி இன்றும் பொருத்தமானதாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரையும் இத்திருமடலை படிக்குமாறு தான் ஊக்குவிப்பதாகவும், அரசியல்வாதிகள் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அதிலிருந்து உத்வேகம் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநிலங்களுக்கிடையேயான மற்றும் தனிநபர்களுக்கிடையேயான உறவுகள், ஆயுத பலத்தால் அல்ல, ஆனால், சரியான காரணத்தின் கொள்கைகளின்படி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தக் கொள்கைகள், உண்மை, நீதி மற்றும் தீவிரமான மற்றும் நேர்மையான ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைனுக்காக செபிப்போம்

இறுதியாக, போரினால் சிதைந்துள்ள உக்ரைன் மக்களுக்காகவும், அவர்களின் பெரும் துயரங்கள் அகலவும் நாம் தொடர்ந்து இறைவனிடத்தில் செப்போம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

Comment