No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

உக்ரைன் நாட்டின் அமைதிக்காக வேண்டுவோம்

வட அயர்லாந்து நாட்டை பல ஆண்டுகளாக வாட்டி வதைத்த வன்முறைகளை முடிவுக்குக் கொணர்ந்த புனித வெள்ளி, அல்லது க்ஷநடகயளவ  ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 25ஆம் ஆண்டு  திங்களன்று நிறைவுறுவதை நினைவுகூரும் அதேவேளையில், அயர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் இது உதவவேண்டும் என இறைவனை நோக்கிச் செபிப்போம் என கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

வான்தூதர்களின் திங்கள் என அழைக்கப்படும், உயிர்ப்பு விழாவுக்கு அடுத்த திங்களன்று நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின்னர் அயர்லாந்து அமைதி ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய ஒப்பந்தம் வழியாக பெறப்பட்ட அமைதி நீடித்து நிலைத்து அனைத்து மக்களுக்கும் பலன் தருவதாக இருக்கவேண்டும் என நன்றியுணர்வுடன், அமைதியின் இறைவனை நோக்கிச் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

உலகம் முழுமைக்கும் அமைதியின் கொடைக்காக, குறிப்பாக உக்ரைன் நாட்டின் அமைதிக்காக இறைவனை நோக்கி இந்நாட்களில் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

Comment