திருத்தந்தை
வத்திக்கான் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தம்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 19 Apr, 2023
வத்திக்கான் நீதி நிர்வாகத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023 ஏப்ரல்13 ஆம் தேதி, நடைமுறைக்கு வந்த வத்திக்கான் நகரத்தின் தண்டனைச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் தேதி, புதனன்று வெளியிடப்பட்ட, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடப்படும் Motu Proprio அறிக்கை வழியாக, அண்மைய ஆண்டுகளில் அதிகமான பணிச்சுமைகள் காரணமாக நீதி நிர்வாகத் துறையில் அதிகரித்து வரும் சிக்கல்களைத் தீர்க்க திருத்தந்தை பிரான்சிஸ் இந்த மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார்.
நடைமுறைகளை எளிதாக்குதல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்கள் நடைமுறைகளை எளிதாக்குவதையும் வத்திக்கான் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மாற்றங்களுடன், நீதியை ஊக்குவிப்பவரின் அலுவலகத்தின் (வத்திக்கான் வழக்கறிஞர்) விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரங்களின் தெளிவான வரையறையும் இதில் அடங்குகின்றது.
சட்டக் குழும உறுப்பினர்களில் இருந்து ஒருவர் வெளியேறும் பட்சத்தில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட சட்டக் குழுமத்திற்கு (College of three magistrates) மாற்றாக ஒருவரைச் சேர்க்கும் வாய்ப்பையும் இந்த மாற்றங்கள் கொண்டுள்ளன. மேலும் சட்ட ஒழுங்கு ஆணையின்படி, பதவியில் இருக்கும் ஒருவர் தனது இறுதி ஆண்டில் இருக்கும் பட்சத்தில், வத்திக்கான் தீர்ப்பாயத்தின் கூடுதல் தலைவரைத் திருத்தந்தை நியமிப்பதற்கான சாத்தியம், மேலும் நீதித்துறை குழுவில் குறைந்தபட்சம் ஒரு முழுநேர நீதிபதியாவது இருப்பதற்கான தேவையை நடைமுறைப்படுத்துதல் ஆகியவையும் இந்த மாற்றங்களில் அடங்கும்.
நீதியை ஊக்குவிப்பவரின் செயல்பாடுகள்
இந்தச் சட்டத்தின் முதல் பத்தி இப்போது பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி வத்திக்கான் நகர மாநிலத்தில் உள்ள நீதித்துறை அதிகாரம், திருத்தந்தையின் பெயரில், நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்பாடுகளுக்காகவும் மற்றும் கேசேஷன் நீதிமன்றம்; நீதியின் ஊக்குவிப்பாளரின் அலுவலகத்தால் விசாரணை மற்றும் வழக்கு விசாரணை செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் புதிய Motu Proprio அறிக்கையில், திருத்தந்தையால் நியமிக்கப்படும் நீதிபதிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை செயல்படுத்துவதில் அவர்கள் சட்டத்திற்கு மட்டுமே உட்பட்டவர்கள்" என்று குறிப்பிடுகிறது. மேலும் அவர்கள் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் மற்றும் வரம்புகளுக்குள், பாரபட்சமின்றி தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் இம்மாற்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிந்தைய விதி எண் 351-ஐ வத்திக்கான் நீதித்துறையை சீர்திருத்தும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் தேதியன்று திருத்தந்தை நடைமுறைப்படுத்தினார்.
நீதிபதிகளுக்கான முழு நேர பணி நீக்கம்
திருத்தந்தையின் புதிய Motu Proprio அறிக்கை 351/2020 இன் பிரிவு 6 இன் பத்தி 2ஐயும் இது நீக்கம் செய்கிறது. அதாவது, நீதிமன்றத்தின் சாதாரண நீதிபதிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு முழுநேர ஆணையுரிமை (Mandate) தேவை என்பதும், வேறு வேலை செய்யவோ அல்லது தொடர்ச்சியான இயல்புடைய பகுதிநேர பணியாளரின் (freelance) செயல்பாடுகளை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என்பதும் இரத்தாகிறது. ஆக, தற்போதைய நிலவரப்படி, நீதிமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மற்ற பதவிகளையும் வகிக்க முடியும் என்பதும் இதன்வழி புலனாகிறது.
பதிலாளிகள் (Substitutes)
மேலே குறிப்பிடப்பட்ட பிரிவு 6 இன் பத்தி 3 இல் இன்னொரு மாற்றமும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தீர்ப்பாயம் என்பது, தொழில்முறை திறன்கள் மற்றும் நடவடிக்கையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தீர்ப்பாயத்தின் தலைவரால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவாகும் என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
"நீதிபதியின் மாறாதத் தன்மை (immutability) கோட்பாட்டிற்கு இணங்கவும், விசாரணையின் நியாயமான காலத்தை உறுதிப்படுத்தவும், தலைவர் ஒரு பதிலாளியை நியமிக்க முடியும், அந்தப் பதிலாளி சட்டக் குழுமத்தின் (College) பணியில் பங்கேற்கவும் மற்றும் அதன் பணிகளில் கலந்துகொள்பவர் மற்றும் குற்றவியல் நடுவரின் செயல்பாடுகளுக்கு இடையூறு அல்லது இடைநிறுத்தம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைவரின் பதவி காலம்
இறுதியாக, Motu Proprio அறிக்கை வத்திக்கான் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை நீக்குவது தொடர்பான 10வது பிரிவுக்கு மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 2020 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, சாதாரண நீதிபதிகள் அனைவரும் 75 வயதை அடையும் நீதியாண்டின் முடிவில், பதவி விலக வேண்டும், அவர்களின் பதவி விலகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்ட பிறகே அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Motu Proprio அறிக்கை ஒரு புதிய பத்தியையும் சேர்க்கிறது, அதன்படி திருத்தந்தை, தலைவர் பதவி விலக வேண்டிய நீதித்துறை ஆண்டில், ஒரு துணைத் தலைவரை நியமிக்க முடியும் என்றும் எடுத்துரைக்கிறது.
Comment