No icon

​​​​​​​பேரருள்தந்தை அந்தோனி ஓனிமுச்சே எக்போ

மனித முன்னேற்றத் திருப்பீட அவைக்குப் புதிய துணைச் செயலர்

பேரருள்தந்தை அந்தோனி ஓனிமுச்சே எக்போ அவர்களை ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புதிய துணைச் செயலாளராக திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இவ்வவையின் புதிய துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்தந்தை எக்போ அவர்கள் இப்போதுவரை திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

பேரருள்தந்தை எக்போ அவர்கள், 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் நைஜீரியாவின் உமுடிகேயில் பிறந்தார். 2011 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் உமுவாஹியா மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்,

2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் (Systematic Theology) முனைவர் பட்டம் பெற்ற பிறகு, 2021 இல் கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டபடிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனி இல்ல ஆன்மீக வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இக்போ மற்றும் ஆங்கிலம் தவிர, இத்தாலிய மற்றும் பிரஞ்சு மொழிகளையும் இவர் கற்றறிந்தவர்.

பேரருள்தந்தை எக்போ 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி முதல், திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்

Comment