No icon

ஆர்ப்பாதுவா இல்லம்

எலிசபெத் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

 ‘ஆர்ப்பாதுவா இல்லத்தின் புனித எலிசபெத் ஆலயம்நகரின் ரோஜாக்கள் வளாகத்தில் அமைந்துள்ளது. புடாபெஸ்ட் நகரின் யூத வரலாற்றைக் கொண்ட 7வது மாவட்டத்தின் இந்த வளாகம், வேலியிடப்பட்ட பொது பூங்காவால் சூழப்பட்டுள்ளதுஹங்கேரியின் புனித எலிசபெத் ஆலயத்தில் ஏழைகள் மற்றும் குடியெயர்ந்தோரை உள்ளூர் நேரம் காலை 10.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.45 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். முதலில் ஹங்கேரியின் காரித்தாஸ் தலைவர் மற்றும் புனித எலிசபெத் ஆலயத்தின் பங்குத்தந்தை ஆகியோரால் திருத்தந்தை வரவேற்கப்பட்டார்.

புனித நீரால் சிலுவை அடையாளம் வரைந்து அங்குள்ளோரை ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆலயத்தில் பீடம் வரை பவனியாக மக்களால் அழைத்துச் செல்லப்பட்டார். காரித்தாஸ் தலைவரின் உரையைத் தொடர்ந்து கிரேக்க கத்தோலிக்க குடும்பம், குடிபெயர்ந்தோர் குடும்பம், நிரந்தர திருத்தொண்டர் அவரது மனைவி ஆகியோர் தங்களது சாட்சிய வாழ்வைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளுக்கான முதல் உரையைத் துவக்கினார். தன் உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரானன்சிஸ் அவர்கள் இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Comment