No icon

அருள்பணி பார்ட்சினேடோ டி நோட்டோ

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நில்லுங்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நிற்பதை ஒரு நாளும் விலக்கிக் கொள்ளாதீர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின்னர் அந்த வளாகத்தில் அதன் நிறுவனருடன் குழுமியிருந்த பிறரன்பு அமைப்பை  திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டினார்.

சிறார்கள் தவறாக நடத்தப்படல், மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அருள்பணி பார்ட்சினேடோ டி நோட்டோ என்பவரால் துவக்கப்பட்ட மீட்டர் என்ற அமைப்பு தற்போது சிறார்களுக்காகப் பணியாற்றிவருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்பதில் ஒருநாளும் சோர்வடையாதீர்கள் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். அண்மையில் உருகுவாயின் மொந்தேவிதியோவிலும்,இஸ்பெயினின் கிரானாடா என்ற இடத்திலும் இரு இறையடியார்கள் அருளாளர்களாக உயர்த்தப்பட்டது குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உருகுவாயின் ஆயர் ஜசின்டா வேறே அவர்கள் உள்நாட்டு சண்டையின்போது ஒப்புரவுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் உழைத்தவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவயதிலேயே படுத்த படுக்கையாக இளவயதிலேயே தன் துன்பங்களை எல்லாம் இயேசுவுக்கு என அர்ப்பணித்த மரிய டி லா என்பவர் தன் 22 ஆம் வயதிலேயே மரணமடைந்தார் எனவும், தற்போது இஸ்பெயினில் அருளாளராக உயர்த்தப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.         

Comment