நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள்,
சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Thursday, 20 Jul, 2023
“நம் சமூகத்தில் பல மதிப்பீடுகளை மீண்டும் கண்டுகொள்வதிலும், அவைகளை ஊக்குவிப்பதிலும் போட்டி விளையாட்டுகள் ஒரு காரணமாகவும், வாய்ப்பாகவும் அமைகின்றன. விளையாட்டுகளை வியாபார நோக்கமுடையதாக மாற்றாமல் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.”
- ஜூலை 10, செல்டா டி வீகோ கால்பந்து குழுக்கான செய்தி
“முன்சார்பு எண்ணங்களும் தன்னலமும் இன்றி செயல்படும் இதயங்களைக் கொண்ட எளியோரே கடவுளின் அரும்பெரும் செயல்களையும், அன்பையும் புரிந்துகொள்ள முடியும். கடவுளின் வல்ல செயல்களால் நாம் வியப்படைய நம்மை அனுமதிக்கும் போதெல்லாம் நல்ல செயல்கள் ஆற்ற வழி பிறக்கின்றது.”
- ஜூலை 9, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை
“பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று இயேசு கூறுபவை எல்லாம் இறைவன் இவ்வுலகில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளங்கள்.”
- ஜூலை 9, ஞாயிறு மறையுரை
“உலகமயமாக்கலின் அலட்சியத்தன்மை நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர்களாகவும், மற்றவர்களின் அழுகையைக் கண்டு உணர்வற்றவர்களாகவும் நம்மை மாற்றுகின்றது.”
- ஜூலை 8, திருத்தந்தையின் லாம்பதூசா திருத்தூதுப்பயண பத்தாமாண்டு நிறைவு உரை
“புலம்பெயர்ந்து நம் இல்லத்தின் கதவுகளைத் தட்டும் சகோதரர்கள் நமது அன்புக்கும், ஏற்றுக்கொள்ளலுக்கும் தகுதியானவர்கள்; அவர்களும் நம்மைப் போலவே பூமியில் உள்ளதை அனுபவிக்கும் உரிமை பெற்றவர்கள்.”
- ஜூலை 8, அக்ரிஜென்டோ மறைமாவட்ட பேராயருக்கான கடிதம்
“மறைசாட்சிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திரு அவையின் வாழ்க்கையுடன் இணைந்து கடவுளின் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த கனியாகச் செழித்து வளர்கின்றனர். முதல் நூற்றாண்டுகளை விட, நாம் வாழும் காலத்தில் மறைசாட்சிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.”
- ஜூலை 5, வத்திக்கான் பேராயங்களுக்குக் கடிதம்
Comment