No icon

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகத்தினரை சந்தித்த திருத்தந்தை

ஏப்ரல் 15 ஆம் தேதி தம்மைச் சந்தித்த இத்தாலிய தேசிய கழகத்தின் 120 உறுப் பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்
தார். இக்கழகமானது, கால்பந்தாட்டத்தை, தொழில் வழியாக அல்லாமல், பகுதி நேரமாகக்
கொண்டுள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 120 பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், ‘பொழுதுபோக்கு, மகிழ்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் ஒருவர்
ஒருவரிடையே உருவாகும் உறவை வலுப்படுத்தவும் உதவும் விளையாட்டில் ஆர்வமுடை யோரைச் சந்திப்பதில் தான் மகிழ்வதாகக் கூறினார்.
வேகமாகச் செல்லவும், விரைவான மாற்றங்களை மேற்கொள்ளவும் நம்மை உந்தித்
தள்ளும் இன்றைய உலகில், ஒரு குறிக்கோளுட
னும், தோல்வியில் துவளாமலும் ஓடவேண்டியதன்
அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, விளையாட்டுத் துறையில் தீர்க்கமான முடிவுகளும், பயிற்சிகளும் மட்டும் போதாது, மாறாக, தோல்வி களைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
நம்மை எதிர்த்து விளையாடுவோரையும் மதிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் விளையாட்டுத்துறை, விளையாட்டுத் திடல்களில், பிறரைச் சந்திப்பது, அவர்கள் விடுக்கும் சவால்களைச் ஏற்பது மற்றும் விளையாட்டு விதிகளை மதிப்பது ஆகியவற்றுடன் கூடிய ஒரு மகிழ்வான நிகழ்வை நமக்கு வழங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தாலிய தேசியக் கழகம், 12,000த்திற்
கும் அதிகமான குழுக்களையும், அவற்றில் இணைந்துள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான இளையோரையும் கொண்ட ஓர் அமைப்பாகும்.
இக்கழகம், தன் 60 ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக் கிறது என்பதும் இங்கே நினைவுக்கூரத்தக்கது.

Comment