உலக அமைதிக்காக ஜெபமாலையைப் பரிசளித்த திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
குருத்தோலை ஞாயிறன்று புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி
நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்,
உலகின் பல்வேறு மறைமாவட்டங் களில் இளையோர் நாளைச் சிறப்பித்து வரும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்
களை தெரிவித்து, உலக அமைதிக்
காக அனைவரும் செபிக்க உதவும் நோக்கத்தில் அனைவருக்கும் ஜெப
மாலையை நினைவுப் பரிசாக அளித்தார்.
இளையோர் குறித்த உலக ஆயர் பேரவையின் கனிகள், விசுவாசத்திலும் பிறர் பணியிலும், அனைத்து இளை யோருக்கும் உதவட்டும் எனவும், இக்கருத்துக்கள், தன் அண்மை திருத் தூது அறிவுரை மடலான ’கிறிஸ்து வாழ்கிறார்’ ‘Christus Vivit’ என்பதில் விரிவாக
விளக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருத்தந்தை பரிசளித்த செப மாலையின் மணிகள் எருசலேமில், ஒலிவ மரத்துண்டுகளால், கடந்த சனவரி உலக இளையோர் தினத்திற் கும், இஞ்ஞாயிறின் உலக இளையோர் நாளுக்கும் என தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செபமாலையை கொடுப்
பதன் வழியாக, இளையோர் அனை
வரும் உலக அமைதிக்காக, குறிப்பாக, புனித பூமி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
Comment