No icon

80 வயதான அருள் சகோதரி உருவாக்கிய சிலுவைப்பாதை

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில் நடைபெற்ற சிலுவைப்
பாதையை  கொன்சொலாத்தா (ஊடிளேடிடயவய) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி (நுரபநnயை க்ஷடிநேவவi) சிறப்பாக வழிநடத்தினார்.   மனித வர்த்தகத்தினால் கொடுமைகளுக்கு உள்ளாகும்
மக்களின் வேதனைகளை மையப்படுத்தி அருள் சகோதரி யூஜினியோ எழுதியிருந்தார். 
80 வயதான அருள் சகோதரி பொனெத்தி அவர்கள், இத்தாலியிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பணியாற்றும் அருள் சகோதரிகளிடம், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை பல ஆண்டுகளாக உணர்த்தி ‘இனி ஒருபோதும் அடிமைகள் கிடையாது’ என்று பொருள்படும் “ளுடயஎநள nடி ஆடிசந” என்ற கழகத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை கத்தோலிக்கத் திருஅவையில் உருவாக்க, இந்தக் கொடுமையை ஒழிக்கும் செப நாளை உலகெங்கும் அறிவிக்க, அருள்சகோதரி பொனெத்தி அவர்கள், 2013 ஆம் ஆண்டு திருத்தந்தையைக் கேட்டுக் கொண்டார். அவரது விண்ணப்பத்தின் அடிப் படையிலும், அவர் வழங்கிய ஆலோசனையின் படியும், மனித வர்த்தகத்தால் துன்புற்ற புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் திருநாளான பிப்ரவரி 8ஆம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிராகச் செபிக்கும் உலக நாள் என்று, 2015 ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.
உரோம் நகரில், இரவில், சாலைகளில், விபசாரத்திற்கென கட்டாயப்படுத்தப்படும் இளம் பெண்களை, கொன்சொலாத்தா துறவுச்
சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகள் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இச்சிலுவைப் பாதை பக்திமுயற்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment