புர்கினா ஃபாசோவில் தாக்குதலில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்கினா
ஃபாசோவில், ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஞாயிறன்று, சில்காட்ஜ் என்ற பிரிந்த
கிறிஸ்தவ சபையின் ஆலயம் ஒன்று
தாக்கப்பட்டது. அதில் 6 பேர் கொல்லப் பட்டனர். இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த ஆயுதம் ஏந்திய மனிதர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி, அவ்வாலயப் போதகர் பியரே மற்றும் அவரின் இரு மகன்கள் உட்பட ஆறு பேரைக் கொன்றனர். இந்நிகழ்வு குறித்து, வத்திக்கான் செய்திகளிடம் பேசிய, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர், அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், புர்கினா ஃபாசோவில், கிறிஸ்தவ ஆலயம் மீது நடத்தப்பட்டுள்ள இப்புதிய தாக்குதல் குறித்த செய்தி அறிந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் கவலையடைந்தார்; இத்தாக்குதலில் இறந்த
வர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அந்நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்திற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிக்கின்றார் என்றும், தெரிவித்தார்.
பின்குறிப்பு:
மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்கினா ஃபாசோவின் மக்கள் தொகையில், ஏறத்தாழ அறுபது விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும், ஏறத்தாழ இருபத்தைந்து விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். அந்நாட்டில் பிரிவினைவாத
வன்முறைகள் அண்மை மாதங்களாகவே இடம்பெற்று வருகின்றன. 2016 ஆம் ஆண்டி
லிருந்து, ஆயுதம் ஏந்திய குழுக்களால், கிராமங்கள், பள்ளிகள் மற்றும், மருத்துவ மனைகள் மீது, 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால்,
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு களைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள் ளனர். தற்போது, பத்து இலட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என, ஐ.நா. கூறியுள்ளது.
Comment