No icon

யூபிலி ஆண்டில் கடன் தள்ளுபடி!

வத்திக்கானின் பாப்பிறை அறிவியல் கழகம், ஜூன் 5-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற திருத்தந்தை, உலகின் கடன் நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தன் கருத்தை எடுத்துரைத்தார். “கடந்த ஆண்டுகளில் உலகமானது, தவறாக நிர்வகிக்கப்பட்ட உலகமயமாதல் கொள்கையாலும், தொற்றுநோய்களாலும், போரினாலும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தற்பொழுது மக்கள் மிகப்பெரிய கடன் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். துன்பத்திலும், துயரத்திலும் இருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் கடன் பிரச்சினையால் தங்கள் மாண்பை இழந்து வருகின்றார்கள். எதிர்காலத்திற்கான தங்கள் கனவு கலைவதால், அவர்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கின்றதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இந்த உலகளாவிய நெருக்கடியைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்வியையும் நமக்கு முன் வைக்கின்றார். அதற்குபுதிய ஆக்கப்பூர்வமான நிதிகட்டமைப்புத் தேவைப்படுகின்றது. கடன் கொடுப்பவர்களுக்கும், கடன் பெறுபவர்களுக்கும் இடையே உரையாடலை ஏற்படுத்தி, இந்த யூபிலி ஆண்டில் ஏழை மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Comment