No icon

உக்ரைன் மருத்துவமனைக்கு உயிர் காக்கும் வாகனம்!

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிட அறப்பணி திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் கொன்ராட் கிரா ஜெவ்ஸ்கி அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த முறை அவர் இரண்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைத்த நிலையில், இது மூன்றாவது ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட உக்ரைனுடனான திருத்தந்தை பிரான்சிஸின் நெருக்கம் மீண்டும் உறுதியாக வெளிப்படுகிறது. மேலும், வத்திக்கான் மருந்தகம் மற்றும் உரோம் மருத்துவமனையிலிருந்து ஏராளமான அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பியுள்ள திருத்தந்தை, போரில் காயமடைந்தவர்களின் உடல் மற்றும் உளவியல் மறுவாழ்வுக்கு உதவுவதற்காக வின்னிட்சியாவில் கட்டப்பட்டுள்ள புனித இரண்டாம் ஜான்பால் மறுவாழ்வு மையத்தைத் திறக்கவும் அனுமதியளித்துள்ளார்.

Comment


TOP