2021ல் உரோம் நகரில் உலக குடும்பங்கள் மாநாடு
- Author குடந்தை ஞானி --
- Sunday, 02 Jun, 2019
திருத்தந்தை பிரான்சிஸ், 2021ம் ஆண்டில் நடைபெறும், உலக குடும்பங்கள் மாநாட்டிற்கென, “குடும்ப அன்பு: தூயவாழ்வுக்கு ஓர் அழைப்பு மற்றும் ஒரு வழி” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, அடுத்த உலக குடும்பங்கள் மாநாடு, உரோம் நகரில், 2021ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல், 27 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறியுள்ளது.
Comment