No icon

புற்றுநோயால் உயிருக்குப் போராடும் குருமாணவருக்கு குருத்துவ அருள்பொழிவு

போலந்து நாட்டில் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தை அடைந்து தன் உயிருக்குப் போராடிவருவதன் காரணமாக, போலந்து நாட்டில், ஓர் இளைய துறவி, மிக்கேல் லோஸ், மே 24, ஆம் தேதி வார்ஸா மருத்துவமனையில் அருள்
பணியாளராக அருள்பொழிவு செய்யப் பட்டார். ஓரியோனைன் (டீசiடிniநே) அருள் பணியாளர்கள் என்றழைக்கப்படும் துறவு
சபையின் உறுப்பினரான மிக்கேல் லோஸ் (ஆiஉhயநட டுடிள) என்ற இளந்துறவிக்கு, திருத் தொண்டர்  மற்றும் அருள்பணியாளர் என்ற இரு நிலைகளையும், ஒரே வேளையில் வழங்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் சிறப்பான அனுமதி வழங்கியதையடுத்து, லோஸ் அவர்களுக்கு அருட்பொழிவு நிகழ்ந்தது.
மே 23, வியாழனன்று ஓரியோனைன்  அருள்பணியாளர்கள் சபையில், தன் இறுதி வார்த்தைப்பாட்டினை, மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம் எடுத்த இளையவர் லோஸ் அவர்களை, அடுத்த
நாள், வெள்ளியன்று, மே 24 ஆம் தேதி
யன்று வார்ஷா பிராகா மறைமாவட்டத்
தின் ஆயர் மாற்கு சோலார்ஸ்க்  திருத் தொண்டராகவும் அருள்பணியாளராகவும் அருட்பொழிவு செய்தார்.
மே 25, சனிக்கிழமையன்று, அருள்பணி மிக்கேல் லோஸ், தன் குடும்பத்தின ருக்கும், நெருங்கிய உறவினருக்கும், மருத்துவமனை படுக்கையில் இருந்த வண்ணம் தன் முதல் திருப்பலியை நிறை
வேற்றினார் என்று, சிஎன்ஏ என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள் ளது. இளம் அருள்பணியாளர் லோஸ் மருத்துவமனை படுக்கையில் ஆற்றிய முதல் திருப்பலியின்போது, தனக்காகச் செபிக்கும் அனைவருக்கும் இறுதியில் நன்றி கூறி, ஒரு புதிய அருள்பணியாளராக, அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கும் காணொளி, முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Comment