செப்.1 முதல் அக்.4 வரை
‘படைப்பின் காலம்’
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 26 Jun, 2019
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி முடிய, கிறிஸ்தவ சபைகளால் சிறப்பிக்கப்படும், படைப்பின் காலத்தை இணைந்து சிறப்பிக்க, கத்தோலிக்கர்களும் தங்களைத் தயாரிக்கவேண்டும் என வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது, .
நம் பொதுவான இல்லமான உலகைக் காப்பதற் குரிய நடவடிக்கை மற்றும் செபத்தை உள்ளடக்கிய வண்ணம் சிறப்பிக்கப்படும் இந்தப் ‘படைப்பின் காலம்’ கிறிஸ்தவ ஒன்றிப்பின் கொண்டாட்டம் எனவும், இக்காலத்தில் இயற்கை மீது கத்தோலிக்கர்கள் கொண்டுள்ள அக்கறையை திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இணைக்க வேண்டும் எனவும், ஜூன் 18 ஆம் தேதி அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாழ்வின் வலைத்தொடர் என்ற தலைப்பில் இவ்வாண்டு கொண்டாடப்படும் இந்த ஒருமாத ‘படைப்பின் காலம்‘, திருத்தந்தையின் "புகழனைத்தும் உமதே" ஏட்டின் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை விண்ணப்பிக்கிறது,
நமது வாழ்வு முறைகளால் பத்து இலட்சம் உயிரின வகைகள் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, இந்தப் படைப்பின் காலக் கொண்டாட்டங்கள் முடிவுற்ற இரு நாள்களிலேயே, அதாவது அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியே, அமேசான் குறித்த உலக ஆயர் மாமன்றக் கூட்டம் துவங்க உள்ளதையும் நினைவுபடுத்தியுள்ளது.
Comment