சிறாருக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும் - திருத்தந்தை
- Author நம் வாழ்வு --
- Wednesday, 17 Jul, 2019
திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வரும், உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, ஜூன் 28, வெள்ளியன்று, புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலுக்கும் திருஅவையின் திருத்தூதுப்பணிக்கும் தங்களை அர்ப்பணித்துள்ள அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், இந்தப் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட வாழ்வில், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி, திருஅவையில் ஒன்றிப்பை ஊக்குவித்து வருவது குறித்தும் பாராட்டினார். தாய்வான், பிரான்ஸ், அர்ஜென்டினா, எத்தியோப்பியா, குவாத்தி மாலா, போர்த்துக்கல் நாட்டுப் பிரதிநிதிகள் தங்களின் செயல்பாட்டைப் பற்றி திருத்தந்தையின் முன்பு விவரித்தனர். அப்போது அவர்களிடம், ‘சிறார்க்குச் இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நிறையச் சிறார் சிலுவை அடையாளம் வரையத் தெரியாமல் இருப்பது கவலை தருகின்றது என்று கூறினார். இறைவேண்டலில் நுழைவது, இயேசுவின் தூய்மையான இதயத்தில் நுழைவதாகும் என்றும், திருத்தந்தை கூறினார். இவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியங்கள் குறித்த தன் எண்ணங்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன சமுதாய ஊடகங்களைப் பயன்படுத்தி, கடவுளின் இரக்கத்தையும் நன்மைத்தனத்தையும் அறிவிக்கையில் இந்த ஊடகங்களுக்கு, குறிப்பாக, இணையதளத்திற்கு அடிமை
யாகாமல் இருப்பதில் கவனம் செலுத்து மாறு கேட்டுக்கொண்டார். இறுதியில் அனைவரோடும் இணைந்து, தனது
ஜூலை மாதச் இறைவேண்டல் கருத்துக்காக திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.
Comment