No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பனாமாவுக்குத் திருத்தந்தையின் 26 வது திருத்தூதுப்பயணம்

பனாமாவுக்குத் திருத்தந்தையின் 26 வது திருத்தூதுப்பயணம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், ஜனவரி 22, செவ்வாயன்று தொடங்கியுள்ள, 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, சனவரி 23 புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் பனாமா சென்றார்இப் பயணத்தை முன்னிட்டு, சனவரி 22 ஆம் தேதி காலை  உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.

23 ஆம் தேதி புதன் காலை 8.55 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 9.35 மணிக்கு பனாமாவுக்குப் புறப்பட்டார்.

12 மணி 55 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, பனாமா நகர் டூக்மென்  பன்னாட்டு விமான நிலையத்தை, அந்நாட்டு நேரம் மாலை 4.30 மணிக்கு சென்றடைந்த திருத்தந்தையை  பனாமா அரசுத்தலைவர், அரசு பிரமுகர்கள், ஆயர்கள் மற்றும்

ஏறக்குறைய இரண்டாயிரம் இறைமக்கள் வரவேற்றனர். பின்னர், திருத்தந்தை பனாமா திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார்.

ஜனவரி 24, வியாழனிலிருந்து பனாமாவில் தனது திருத்தூதுப்பயண நிகழ்வுகளைத் தொடங்கி னார். காலை  7.45 மணிக்கு, பனாமா திருப்பீடத் தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், காலை உணவை முடித்துவிட்டு, 9.30 மணிக்கு, பனாமா அரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று அரசுத் தலைவரைச் சந்தித்தார்.

ஜனவரி 27 ஆம் தேதி ஞாயிறு காலை எட்டு மணிக்கு 34வது உலக இளையோர் நாளின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றி, எழுச்சி மிகு மறையுரையாற்றினார்அன்று மாலையே 6.15 மணிக்கு அங்கிருந்து உரோமைக்குப் புறப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பனாமாவில் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப்பயணம், அவரது 26வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாகும்.

Comment