Vatican News
போலந்தில் தேசிய விவிலிய வாசிப்பு
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 02 May, 2020
போலந்தில் தேசிய விவிலிய வாசிப்பு
போலந்தில், தேசிய அளவில் திருவிவிலியம் வாசிப்பதில் பங்குகொள்ளும் எல்லாருக்கும் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் நற்செய்தி வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் இஞ்ஞாயிறன்று வலியுறுத்தினார்.
விசுவாசிகள் எங்குச் சென்றாலும் நற்செய்தி நூலை எடுத்துச் செல்லுமாறும், அதன் வழியாக, இறைவார்த்தை நமக்கு அருகில், ஏன் உடலளவிலும்கூட நமக்கு அருகில் எப்போதும் இருக்கும் என்று திருத்தந்தை கூறினார்.
மேலும், அன்னை மரியாவுக்குச் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், செபமாலை செபிக்குமாறு கூறிய திருத்தந்தை, சனிக்கிழமையன்று தான் வெளியிட்ட ஒரு மடல் வழியாக, வீடுகளில் செபமாலை செபிக்க அழைப்பு விடுத்ததையும் எடுத்துரைத்தார்.
நாம் வாழ்கின்ற இந்த துன்ப காலத்தில் மிகுந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் வாழ அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
Comment