No icon

திருத்தந்தை

நீதி மற்றும் அமைதிக்கான வழிகளைத் தேடுவோம்

நிக்கராகுவா நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் இதயங்களும் உண்மை, சுதந்திரம் மற்றும் உரையாடலை உள்ளடக்கிய அமைதி மற்றும் நேர்மைக்கான வழிகளைத் தேடவேண்டும் என அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 12,  ஞாயிறன்று, தான் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அதிகம் அன்புகூரும் ஆயர் ரோலண்டோ அல்வாரெஸ் அவர்களுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆயர் அல்வாரெஸ்-காகவும், மேலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட 222 சிறைக்கைதிகளுக்காகவும்அன்புக்குரிய நாடான நிக்கராகுவாவில் துன்புறும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமையன்று, மனாகுவாவில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அரசியல் காரணங்களுக்காக 222 சிறைக்கைதிகள் நிக்கராகுவா நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதில் 5 அருள்பணியாளர்கள், ஒரு திருத்தொண்டர், 2 அருள்பணித்துவ மாணவர்களும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து  56 வயதான ஆயர் அல்வாரெஸ் அவர்களுக்கு 26 ஆண்டுகள், நிக்கராகுவா நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளது.

Comment