No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

“ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் நமது சிந்தனை, இதயம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பெரியவர்களாக இருந்தாலும், தாழ்ச்சியுள்ள சிறியவர்களாக நம்மை மாற்றிக்கொள்ளும்போது, நாம் விண்ணரசிலும் பெரியவர்களாகக் கருதப்படுகிறோம்.”

- அக்டோபர் 02, 16-வது உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்திற்கான ஆரம்பத் திருப்பலி மறையுரை

“தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், தீமையை எதிர்க்கும் போதும் மன்னிப்பதற்கான போராட்டம், அமைதியைத் தேடும் துணிவின்மை, விரக்தி போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கிறார்.”

- அக்டோபர் 02, ஆயர் மாமன்றத்தின் 16-வது பொதுப் பேரவையின் இரண்டாவது அமர்வில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரை

“நாம் வாழும் இந்தச் சுற்றுச்சூழல் விண்ணகத்திலிருந்து நமக்குக் கிடைத்த கொடை! வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு மத்தியில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் அழகை இரசிக்க நமக்கு நினைவூட்டுகிறது.”                         

- அக்டோபர் 03, குறுஞ்செய்தி

“கடவுள் தம் முடிவற்ற அழகையும், நன்மைத்தனத்தையும், நமக்கு ஒரு கணநேரக் காட்சியாகத் தரும் மிக உன்னத நூலாகப் படைப்பைப் பார்க்க வேண்டும்.”

- அக்டோபர் 04, புனித அசிசியின் திருவிழா, ‘எக்ஸ்’ தளப்பதிவு

“குடும்ப வாழ்வில் சோதனையும் கவலையும் ஏற்படும் நேரங்களில் மரியாதை, நேர்மை, எளிமை என்னும் பண்புகள் அவசியமாகின்றன.  மோதல் மற்றும் தர்க்க நேரங்களில் மன்னிப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.”

- அக்டோபர் 06, ஞாயிறு மூவேளைச் செப உரை

 

 

Comment